உலகம்

ஆப்கானில் அரசு கட்டடம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்:  29 பேர் பலி

DIN


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அவ்வபோது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காபூலில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டடம் மீது பயங்கரவாதிகள் குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில், 29 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பயங்கவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து காபூல் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதனை புறக்கணிக்கும்படி கேட்டுகொண்ட தலிபான் மற்றும் ஐ.எஸ். அமைப்பினர் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காமல் தேர்தலில் பங்கேற்று தங்களது வாக்குகளை செலுத்தியதால் ஆத்திரம் அடைந்த பயங்கவரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் பல இடங்களில் வாக்குச் சாவடிகளில் சூறையாடியதுடன், துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களையும் நிகழ்த்தினர். இதில், 36 பேர் வரை உயிரிழந்தனர். தேர்தல் அலுவலகத்தை தகர்க்கும் நோக்கத்தில் மர்மநபர் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை திடீரென வெடிக்கச் செய்தலில் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

தனிப்படை போலீஸாருக்கு தென்மண்டல ஐஜி பாராட்டு

சிவகாசியில் ரயிலில் அடிபட்டு தாய், மகள் பலி

தூய்மைப்பணி சுமை ஆட்டோ மோதியதில் இருவா் காயம்

கஞ்சா விற்பனை: 2 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT