முகப்பு
உலகம்

 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து: 44 பேர் பலி! 

பெரு நாட்டில் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலியானார்கள். 

Updated On : 22 பிப்ரவரி, 2018 at 3:21 PM
பகிர்:

லிமா: பெரு நாட்டில் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 44 பேர் பலியானார்கள். 

பெருநாட்டில்  50 க்கும்மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று ஒகோனா  பகுதியில் உள்ள மனபெரிகனசூர்  நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது அங்கு இருந்த ஆபத்தான வளைவு ஒன்றில் திரும்பும் ழுது பேருந்து நிலை தடுமாறி அருகில் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

பள்ளத்தின் அருகில் ஆறு ஓடிக் கொண்டிருந்ததால் பேருந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டது.  இதில் 44 பயணிகள் பலியானார்கள். தகவல் கேட்டு விரைந்து வந்த மீட்பு குழுவினர் ஆற்றில் குதித்து உடல்களை மீட்டு கரை சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் , விபத்து நடந்த பகுதியின் அருகாமையில் ஆறு ஒன்று ஓடுவதால், மேலும் சிலரின் உடல்கள் அந்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 300 அடி ஆழத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளதால் உடல்களை மீட்கும் பணி கடுமையாக உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.