உலகம்

தவறி விழுந்த சிறுவன்; தாங்கிப் பிடித்த போலீஸ் அதிகாரி: 'திக் திக்' காட்சிகள்! (விடியோ இணைப்பு) 

மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழும் ஐந்து வயது சிறுவன் ஒருவனை, போலீஸ் அதிகாரி ஒருவர், தாங்கிப்பிடித்து காப்பாற்றும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

DIN

கெய்ரோ: மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழும் ஐந்து வயது சிறுவன் ஒருவனை, போலீஸ் அதிகாரி ஒருவர், தாங்கிப்பிடித்து காப்பாற்றும் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

எகிப்து நாட்டின் அசியுட் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் குடியிருப்பு பகுதி ஒன்று உள்ளது. கடந்த 17-ம் தேதி அந்த குடியிருப்பின் மூன்றாவது மாடி பால்கனியில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் தொங்கியவாறு இருந்துள்ளான்.  அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்புப்பணியில் இறங்கினர். 

ஒரு போலீஸ் அதிகாரி அருகில் இருந்த போர்வை ஒன்றை எடுத்து சிறுவனை தாங்கிப்பிடிப்பதற்காக தயார் செய்தார். மற்றொருவர் அருகில் உள்ளவர்களை உதவ வருமாறு அழைக்கச் சென்றார். மூன்றாவது அதிகாரி ஒருவர் சிறுவனுக்கு நேராக கீழே நின்று பிடிக்க தயாராக த்திருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுவன் கைதவறி கீழே விழுந்தான். ஆனால் நல்ல வேளையாக மூன்றாவது அதிகாரி அவனைத் தாங்கிப்பிடித்தார். இதனால் இருவரும் கீழே விழுந்தனர். அந்த சிறுவனை போலீஸ் அதிகாரி தாங்கிப்பிடித்ததால் அவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

அந்த போலீஸ் அதிகாரிக்கு மட்டும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகி இருந்தது.

தற்பொழுது அந்நாட்டு உள்துறை அமைச்சக முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ சமூக வலைத்தளங்களால் வைரலாகப் பரவி வருகிறது.

வீடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகை: 7 மாதங்களில் ரூ.1.84 கோடி ரேஷன் பொருள்கள் பறிமுதல்

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

SCROLL FOR NEXT