உலகம்

பப்புவா நியூகினியா தீவில் பயங்கர நிலநடுக்கம்: 20 பேர் பலி 

DIN

போர்ட் மாரேஸ்பை: பப்புவா நியூகினியா தீவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் பலியாகினர்

பசிபிக் பெருங்கடலில் உள்ள குட்டித் தீவான பப்புவா நியூ கினியாவின் ஹெலா மாகாணத்தில் திங்களன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம்7.5 ஆக பதிவாகியது. கடலுக்கடியில்   35 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பெரும்பாலான சாலைகள் மற்றும் வானுயர்ந்த கட்டிடங்கள் சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலா மாகாணத்தில் பெரும்பாலான இடங்களில் தொலை தொடர்புகள் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், 300 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவலால் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த நாள் இனிய நாள்..!

இன்று அமோகமான நாள்!

இடிதாக்கி ஆடு மேய்த்த இளைஞா் பலி

காங். நிர்வாகி ஜெயக்குமார் மரணம்: கிணற்றில் நீரை வெளியேற்றி தடயங்களை தேடும் போலீஸாா்

புதுவையில் நீட் அல்லாத படிப்புகளுக்கு ஜூன் 5-இல் தரவரிசைப் பட்டியல்

SCROLL FOR NEXT