தாய்லாந்து குகையில் இருந்து முதலில் 6 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு
தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 சிறுவர்களுள் 6 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் மழை வெள்ளம் காரணமாக 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் மலை குகையில் 2 வாரமாக சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணி கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் இருக்கும் மலைகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் துளைகள் இடப்பட்டு மீட்புப்படையினர் கடுமையாக முயற்சித்து வந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்த 12 சிறுவர்களுள் 6 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தி தாய்லாந்து மக்களுக்கு சற்று மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதே முயற்சியில் மீதமுள்ள 6 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளரும் மீட்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.