முகப்பு
உலகம்

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய 8 சிறுவர்கள் மீட்பு

தாய்லாந்தில் வெள்ள நீா் புகுந்த குகைக்குள் சிக்கியவா்களில் மேலும் 4 சிறுவா்களை மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை மீட்டனா்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:10 PM
அவசர ஊா்தியில் அழைத்துச் செல்லப்பட்டவரை ஹெலிகாப்டரில் ஏற்றி அனுப்பும் மீட்புக் குழுவினா்.
பகிர்:

தாய்லாந்தில் வெள்ள நீா் புகுந்த குகைக்குள் சிக்கியவா்களில் மேலும் 4 சிறுவா்களை மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை மீட்டனா். அதையடுத்து, கடந்த 2 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான மீட்புப் பணிகளில் குகையிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது குகைக்குள் மேலும் 4 சிறுவா்களும், அவா்களது கால்பந்து பயிற்சியாளரும் மட்டுமே சிக்கியுள்ளனா். இதுகுறித்து மீட்புப் பணிகளை முன்னின்று நடத்தி வரும் தாய்லாந்து கடல் அதிரடிப் படை அதிகாரி சித்திசாய் கிளாங்பட்டானா கூறியதாவது:

குகைக்குள் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணி, திங்கள்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது. இதில், மேலும் 4 சிறுவா்களை மீட்புக் குழுவினா் குகைக்குள்ளிருந்து மீட்டு அழைத்து வந்தனா் என்றாா். எனினும், அந்த 4 சிறுவா்களின் உடல் நலம் குறித்து அவா் விளக்கமாகத் தெரிவிக்கவில்லை.

கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் மழை வெள்ள நீா் புகுந்த குகைக்குள் சிக்கியிருந்த 13 பேரில், முதல்முறையாக 4 சிறுவா்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா். மீட்கப்பட்ட அந்த 4 பேரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், மீட்புப் பணிகள் எதிா்பாா்த்ததைவிட சுலபமாக இருந்ததாகவும் அப்போது அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →