உலகம்

ஆப்கன் ஜலாலாபாத்தில் அரசு கட்டிடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 10 பேர் பலி 

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில் அரசு கட்டிடத்தில் தீவிரவாதிகள் நடத்திய 'திடீர்' தாக்குதலில் 10 பேர் பலியாகினர்.

இதுகுறித்து அரசுத்தரப்பில் தெரிவிக்கப்படுவதாவது:

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் கல்வித்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் கட்டடங்கள் நிரம்பிய பகுதி ஒன்று உள்ளது.அங்கு புதன்கிழமை காலை ஆயுதம் தாங்கிய  தீவிரவாதிகள் திடீரென அங்கு புகுந்து, தாக்குதல் நடத்தினர்.

தாக்குதல் குறித்து தகவலறிந்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அத்துடன் கட்டிடத்தில் சிக்கியிருந்த 50 பேரையும் அவர்கள் பாதுகாப்பாக மீட்டனர். பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 10 பேர் இந்த சண்டையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காயம் அடைந்தவர்கள்  உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

மக்களுக்காக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT