உலகம்

இம்ரான் கான் வாக்கினை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் பரிசீலனை

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கானின் வாக்கினை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

ANI

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கானின் வாக்கினை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.

கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில் தற்போது தான் 2-ஆவது முறையாக பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. சுமார் 106 மில்லியன் வாக்காளர்களைக் கொண்ட அங்கு எந்தவொரு பிரதமரும் இதுவரை 5 ஆண்டுகள் வரையிலான தனது  முழு ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்தது கிடையாது.  

இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான் கான் மற்றும் பிஎம்எல்-என் கட்சித் தலைவர் ஷேபாஸ் ஷெரீஃப், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஆகியோர் தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் அவர்களது வாக்குகளை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இதில் இம்ரான் கான், தான் வாக்களிக்கும் போது அதை ஊடகங்கள் பதிவு செய்யும் விதமான வகையில் செயல்பட்டுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் வாக்களித்து விட்டு செய்தியாளர்களைச் சந்திக்கையில், தங்கள் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

SCROLL FOR NEXT