கோப்புப்படம் 
உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 23 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

பாகிஸ்தானில் குவெதா நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

DIN

பாகிஸ்தானில் குவெதா நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

பாகிஸ்தானின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் புதன்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் கடந்த 70 ஆண்டுகால வரலாற்றில், தேர்தல் மூலம் தொடர்ந்து 2-ஆவது முறையாக ஆட்சி மாற்றம் நடைபெறவிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தேர்தலில், ராணுவத்தின் தலையீடு, பயங்கரவாத ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமான எண்ணிக்கையில் போட்டியிடுவது போன்ற குறைகள் கூறப்பட்டாலும் திட்டமிட்டபடி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பலூசிஸ்தான் குவெதா நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது, அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸார் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 30-க்கும் மேல் இருக்கலாம் என்று அஞ்சுகின்றனர். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் சமயத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT