முகப்பு
உலகம்

தேர்தல் தொடர்பான ஒளிபரப்புகளுக்கு தடை: பாகிஸ்தான் ஊடக ஆணையம் உத்தரவு

பாகிஸ்தானில் தேர்தல் தொடர்பான ஒளிபரப்புகளுக்கு தடை விதித்து அந்நாட்டு மிண்ணனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

பாகிஸ்தானில் தேர்தல் தொடர்பான ஒளிபரப்புகளுக்கு தடை விதித்து அந்நாட்டு மிண்ணனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு டான் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

கடந்த 23-ஆம் தேதியுடன் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரங்களும் முடிவடைந்தது. இதையடுத்து தேர்தல் பிரசாரங்களில் குறிப்பிட்ட கட்சிகள், அரசியல் தலைவர்களின் பேச்சு உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் அடங்கிய தொகுப்புகளை வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு ஊடகங்களில் ஒளிபரப்ப புதன்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வாக்காளர்களை கவரும் விதமான அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், பட்டிமன்றங்கள், தேர்தல் கருத்துக்கணிப்புகள் உள்ளிட்டவைகளை ஒளிபரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.