உலகம்

70 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட வாக்குரிமை: முதல்முறை வாக்களிக்கும் பாகிஸ்தான் கிராம பெண்கள்

பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த 70 ஆண்டு வரலாற்றில் அங்கு ஒரு கிராம பெண்கள் முதன்முதலாக தங்களது வாக்குகளை புதன்கிழமை செலுத்தியுள்ளனர். 

DIN

பாகிஸ்தானில் 11-ஆவது பொதுத் தேர்தல் புதன்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. ஒரு வகையில் இந்த தேர்தல் மூலம் பாகிஸ்தான் ஒரு வரலாற்றுச் சிறப்பு பெருமையை பெற்றுள்ளது. 

பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் குஷாப் எனும் நகரில் ஒரு கிராமம் உள்ளது. அந்த கிராமத்தின் வழக்கப்படி வீட்டுக்கு வெளியே நிகழும் எந்த நிகழ்விலும் பெண்கள் பங்கேற்ககூடாது. அதனால், அவர்கள் வாக்களிப்பதற்கும் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள். இதனால், சுதந்திரம் பெற்றதில் இருந்து அந்த கிராம பெண்கள் தேர்தலில் வாக்களித்ததே கிடையாது. 

ஆனால், நடப்பு பொதுத் தேர்தலில் அந்த கிராம பெண்கள் வாக்களிப்பதற்கு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அவர்கள், புதன்கிழமை காலை அருகில் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை செலுத்தி சென்றனர். 

இதன்மூலம், அந்த கிராம பெண்கள் சுதந்திரம் பெற்ற 70 ஆண்டு காலத்தில் முதன்முதலாக தங்களது உரிமையை நிலை நாட்டியுள்ளனர். அந்த வகையில், நடப்பு தேர்தல் ஒரு வரலாற்றுப் பெருமையை அடைந்துள்ளது.

இந்த தேர்தலில், மொத்தம் 10 கோடி 56 லட்ச வாக்காளர்கள் உள்ளனர். அதில், பெண் வாக்காளர்கள் 4 கோடி 76 லட்சம் பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணி வரை இடைவிடாது நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT