முகப்பு
உலகம்

உலகின் மிகவும் ஆபத்தான 50 நகரங்களின் பட்டியல் வெளியீடு: மெக்சிகோவின் லாஸ் கபோஸ் முதலிடம்!

உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான 50 நகரங்கள் பட்டியலில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:27 PM
பகிர்:

உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான 50 நகரங்கள் பட்டியலில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடத்தில் உள்ளது.

உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் 50 நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் 365 கொலை குற்றங்கள் நடந்துளளன. வன்முறை போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்ற செயல்கள் அதிகரித்துள்ளன. உலகின் போதை மருந்துக்கு அது ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இங்கு போதை பொருள் கடத்தல் கும்பலின் மோதல்கள் தினசரி நடைபெறுகிறது. அரசியல் ஸ்திரமின்மை, வறுமை மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றால் பாதுகாப்பின்மை மேலும் மோசமடைந்துள்ளது. 

இதற்கு அடுத்த படியாக வெனிசுலாவின் கராகஸ் நகரம் 2-வது இடத்தில் உள்ளது. வெனிசுலாவில் உள்ள இரண்டு நகரங்கள் இந்த ஆண்டின் தரவரிசை பட்டியலில் இருந்து ஒதுக்கப்பட்டன. மெக்சிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ 3-வது இடத்திலும், பிரேசிலின் நடால் நகரம் 4-வது இடத்திலும், மெக்சிகோவின் டிஜூவானா 5-வது இடத்திலும் உள்ளது.

இவை தவிர லாபாஷ் (மெக்சிகோ), 6-வது இடத்திலும், போர்டாலிஷா (பிரேசில்) 7-வது இடத்திலும், விக்டோரியா (மெக்சிகோ) 8-வது இடத்திலும், குயானா (பிரேசில்) 9-வது இடத்திலும், பிலீம் (பிரேசில்) 10-வது இடத்திலும் உள்ளது. மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரம் 13-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இங்கு சுமார் 205 கொலை குற்றங்கள் நடந்துள்ளன. கொலம்பியாவின் குகூடாவில் 50வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 290 கொலை குற்றங்கள் நடந்துள்ளன. 

2017-ஆம் ஆண்டு அதிக குற்றச் செயல்கள் நடந்த நகரங்களின் பட்டியலில் மெக்சிகோவின் 12 நகரங்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால் ஐரோப்பிய, ஆசிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடா நகரங்கள் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.