உலகம்

பிரான்ஸில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி தாக்குதல்: 2 பேர் சாவு

Raghavendran

பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள டிரெபீஸ் எனும் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பல்பொருள் அங்காடியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன் வெள்ளிக்கிழமை கைப்பற்றினான். திடீரென அந்த அங்காடியில் நுழைந்த அந்த பயங்கரவாதி அங்கிருந்த அத்தனை பொதுமக்களையும் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்தான்.

இந்நிலையில், அங்கு விரைந்த பிரான்ஸ் காவல்துறை அந்த பயங்கரவாதியுடன் சுமார் 3 மணி நேரங்களுக்கும் மேல் தாக்குதல் நடத்தியது. பின்னர் அங்காடியின் உள்ளே புகுந்து அந்த ஐஎஸ் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர். பின்னர் அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

இருப்பினும், இந்த தாக்குதல் சம்பவத்தின் போது அங்காடியில் இருந்த இருவர் ஐஎஸ் பயங்கரவாதியால் படுகொலை செய்யப்பட்டனர். 

கடந்த 2015-ஆம் ஆண்டு பாரீஸ் நகரத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு காரணமாக இருந்த சாலாஹ் அப்தெஸ்லாம் எனும் ஐஎஸ் பயங்கரவாதியை விடுவிக்கக்கோரி இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் அதிர்ச்சியில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி

வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி!

இந்தூர்: 11.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்கும்: ராகுல்

கங்கனா ரணாவத், அனுராக் தாக்குர்.. வெற்றி!

SCROLL FOR NEXT