உலகம்

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசான் இக்பால் மீது துப்பாக்கிச் சூடு 

ANI

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது அசான் இக்பால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதால் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசான் இக்பால்(59). ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த இவர், இன்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்குட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, ஒரு இளைஞர் அவரை நோக்கு துப்பாக்கியால் சுட்டார். குறிதவறி பாய்ந்த துப்பாக்கி தோட்டா அசான் இக்பாலின் வலதுகை தோள்பட்டையில் பாயந்தது. இதில் பலத்த காயமடைந்த இக்பால், நாரோவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  

இச்சம்பவம் தொடர்பாக 20 வயதிற்குட்பட்ட இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT