உலகம்

மலேசிய பிரதமராக 92 வயதான மகாதிர் முகம்மது பதவியேற்பு 

DIN

கோலாலம்பூர்: மலேசியாவில் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற 92 வயதான மகாதிர் முகம்மது, அந்நாட்டு பிரதமராக வியாழன் அன்று பதவியேற்றுக் கொண்டார்

222 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய நாடாளுமன்றத்துக்குக் கடந்த செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெற்றது.  ஆளும் கட்சியான பிரதமர் நஜீப் ரசாக்கின் பி.என்.கட்சிக்கும், முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது தலைமையிலான மலேசிய ஐக்கிய உள்நாட்டுக் கட்சி(எம்யுஐபி) தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் 69 சதவீதம் வாக்குகள் பதிவாகியது.

பதிவான வாக்குகள் புதனன்று எண்ணப்பட்டன. இதில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பகாதான் ஹரப்பான் கூட்டணி 121 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.பிஎன் கட்சி 79 இடங்களில் மட்டுமே வென்றது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் இருத்தலே போதுமானது குறிப்பிடத்தக்கது. மலேசியா சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற 92 வயதான மகாதிர் முகம்மது, அந்நாட்டு பிரதமராக வியாழன் அன்று பதவியேற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT