உலகம்

காஸா பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச் சூடு: 16 பாலஸ்தீனியர்கள் பலி 

DIN

காஸா சிட்டி: காஸா முனை பகுதியில் இஸ்ரேலிய ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அத்துடன் இஸ்ரேல் நாட்டின்  தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கி வந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்றவும் அவர் உத்தரவிட்டார். 

ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியத்திற்கும் இடையேயான காஸாமுனை எல்லைப்பகுதியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது கற்களை வீசியும், பாதுகாப்பு வேலியை தகர்த்தெறிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நிலையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு இஸ்ரேலிய ராணுவத்தினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 16 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT