உலகம்

ரம்ஜான் நோன்பு இன்று தொடங்குகிறது

DIN

சவூதி அரேபியாவில் ரம்ஜான் நோன்பு மாதம் வியாழக்கிழமை (மே 17) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், "நிகழாண்டு ரம்ஜான் புனித மாதத்தின் முதல் நாள் மே 17' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் புனித மாதத்தில் நோன்பு கடைப்பிடிப்பதை, இஸ்லாமியர்கள் தங்களது 5 கடமைகளில் ஒன்றாக கொண்டுள்ளனர். ரம்ஜான் மாதம் முழுவதும் சூரிய உதயம் தொடங்கி அஸ்தமனம் வரையில் உண்ணா நோன்பு கடைப்பிடித்து சிறப்பு பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.
பிறை காணுதல் மற்றும் நிலவு நாள்காட்டி கணக்கீட்டின் அடிப்படையில் ரம்ஜான் புனித மாதம் தொடங்கும் நாள் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலும் சவூதி அரேபியா நிர்ணயிக்கும் தேதிகளையே முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள இதர நாடுகளும் பின்பற்றுகின்றன. எனினும், ஒரு சில நாடுகள் தங்களுக்கென தனி கணக்கீட்டின் அடிப்படையில் தேதியை நிர்ணயம் செய்துகொள்கின்றன. சவூதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் இரு முக்கிய புனிதத் தலங்களான மெக்கா, மதீனா ஆகியவை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT