உலகம்

பாகிஸ்தானுக்கு ரூ.9360 கோடி நிதி உதவி ரத்து: அமெரிக்கா அறிவிப்பு  

தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு ரூ.9360 கோடி நிதி உதவி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

DIN

வாஷிங்டன்: தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு ரூ.9360 கோடி நிதி உதவி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் மறைந்து இருந்து செயல்படும் பயங்கரவாதிகளையும், சுதந்திரமாகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி ஒழிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. 

ஆனால் அங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பின்னரும் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு ரூ.9360 கோடி நிதி உதவி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தானில் மறைந்து இருந்து செயல்படும் பயங்கரவாதிகளையும், சுதந்திரமாகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி ஒழிக்கும் விஷயத்தில் எங்களுக்கு உதவ வேண்டும் என பல ஆண்டுகளாக அமெரிக்கா தொடர்ந்து பாகிஸ்தானை எச்சரித்து வருகிறது. 

ஆனாலும் கூட இந்த விஷயத்தில், எங்களுக்கு பாகிஸ்தான் உதவவில்லை. அப்படி இருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ராணுவ நிதி உதவியாக அளிக்கப்படும், ரூ. 9360 கோடியை  வழங்க முடியாது. 

ஒசாமா பின் லேடன் விஷயத்தில் கூட எங்களுக்கு ஒரு தகவலும் அளிக்காமல் எங்களிடம் இருந்து கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவிகளை மட்டும் தொடர்ந்து பெற்றனர்.

எனவே பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டாமல் பாகிஸ்தானுக்கு, இனி அமெரிக்காவால் ஒருபோதும் நிதியுதவி அளிக்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு பேருந்து வசதி இல்லாததால் மக்கள் அவதி

சேவைக் குறைபாடு: ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

SCROLL FOR NEXT