உலகம்

2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல்: அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் கனடா விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு 

DIN

ஸ்டாக்ஹோம்: 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்புகள் திங்கள் முதல் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலாவதாக திங்களன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசுக் கமிட்டியினர் இதனை வெளியிட்டனர். 

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது லேசர் இயற்பியல் குறித்த புதிய ஆய்வுகளுக்காக, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மூவருக்கு சற்றுமுன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸின் ஜெரால்டு மௌரோ மற்றும் கனடாவைச்     சேர்ந்த பெண் விஞ்ஞானியான டோனா ஸ்ட்ரிக்லாண்ட் ஆகிய மூவருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசானது கூட்டாக வழங்கப்படுகிறது.     

118 ஆண்டு கால் நோபல் பரிசு வரலாற்றில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் டோனா ஸ்ட்ரிக்லாண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT