உலகம்

கென்யாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 50 பேர் பலி 

IANS

நைரோபி: கென்யாவின் வடக்குப் பகுதியில் புதனன்று காலை பேருந்து கவிழ்ந்த விபத்தில் 50 பேர் பரிதாபமாக பலியாகினர். 

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இருந்து அந்நாட்டின் வடபகுதியில் விக்டோரியா நதிக்கரையில் அமைந்துள்ள கிசுமு என்ற இடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த் பேருந்தில் 67 பேர் பயணிக்கக் கூடிய வசதி உள்ளது. 

அப்பேருந்தானது கெரிச்சோ மாகாணத்தின் போர்ட் டெர்னான் என்ற இடத்திற்கு அருகே வந்துகொண்டிருந்த பொழுது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை  மீறி சாலை அருகே இருந்த சிறு பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குளானது. 

இந்த விபத்தில் 31 ஆண்கள், 12 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் மரணமடைந்தனர். இடிபாடுகளுக்கு இடையே மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

குறிப்பிட்ட அந்த இடமானது அடிக்கடி இத்தகைய விபத்துகள் நடக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது  

இந்தத் தகவலை பிபிசி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. 

விபத்தில் மரணமடைந்தோரின் குடும்பங்களுக்கு கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறைச்சந்தையில் தவற விட்ட பணப்பை ஆந்திர மாநில தம்பதியரிடம் ஒப்படைப்பு -கைதிக்கு பாராட்டு

மேம்பாலத்தை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

ரத்த தான முகாம்

மேலக்கடலாடி ஸ்ரீபாதாள காளியம்மன் களரி திருவிழா

வெளிநாடுகளில் வேலை தருவதாகக் கூறும் மோசடி நிறுவனங்களை நம்ப வேண்டாம்

SCROLL FOR NEXT