தென்கொரிய அதிபருக்கு மோடி அனுப்பிய விசேஷ கோட்: புகைப்படத்துடன் நன்றி கூறும் மூன்
பிரதமர் மோடி வழக்கமாக அணியும் கை இல்லாத மேல் கோட் போன்ற விசேஷ கோட்டை தனக்காக அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் தென் கொரிய அதிபர் மூன் ஜே.
சியோல்: பிரதமர் மோடி வழக்கமாக அணியும் கை இல்லாத மேல் கோட் போன்ற விசேஷ கோட்டை தனக்காக அனுப்பியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் தென் கொரிய அதிபர் மூன் ஜே.
பிரதமர் மோடி தனக்கென பிரத்யேகமாக தயாரித்து அனுப்பிய விசேஷ கோட்டை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் டிவிட்டரில் ஃபிட் கிரேட் என்று பதிவிட்டுள்ளார் அதிபர்.
இந்திய பாரம்பரிய உடையான மோடி ஜாக்கெட்டை தென்கொரியாவில் அணிவதும் மிக எளிதாக இருக்கிறது. இந்தியாவுக்கு நான் வந்திருந்த போது, பிரதமர் மோடி அணியும் விசேஷ கோட் மிக அழகாக இருப்பதாகக் கூறினேன். இதையடுத்து, எனது அளவுக்கு தைக்கப்பட்ட கோட்டுகளை மோடி அனுப்பி வைத்துள்ளார். அவரது அன்புக்கு எனது நன்றிகள் என்று மூன் கூறியுள்ளார்.