உலகம்

ரோஹிங்ய இஸ்லாமியர் படுகொலைகளுக்கு ஆதரவு: ஆங் சாங் சூகியின் கனடிய குடியுரிமை ரத்து 

DIN

ஒட்டாவா: மியான்மரில் நடைபெற்ற  ரோஹிங்ய இஸ்லாமியர் படுகொலைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டதாக ஆங் சான் சூகியின் கனடிய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.  

அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரான மியன்மரின் ஆங் சான் சூகி மியான்மர் அரசாங்கத்தின் ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இருக்கு கனடா அரசு 2007-ஆம் ஆண்டு கவுரவ குடியுரிமை வழங்கியது. திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லமா, பெண்கள் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு செயலாற்றி வரும் பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய், மற்றும் மறைந்த தென் ஆபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா உள்பட 5 பேருக்கு மட்டுமே இதுவரை கனடா நாட்டின் கவுரவ குடியுரிமை வழங்கபட்டிருப்பது கவனிக்கத்தக்கது. 

இந்நிலையில் மியான்மரில் நடைபெற்ற  ரோஹிங்ய இஸ்லாமியர் படுகொலைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டதாக ஆங் சாங் சூகியின் கனடிய குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.  
 
மியான்மரில் ரோஹிங்ய இஸ்லாமியர்களுக்கு எதிரான அந்நாட்டு ராணுவத்தின் அடக்குமுறையை தடுக்க தவறியதாக ஆங் சாங் சூகி மீது சர்வதேச அளவில் புகார் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையின் காரணமாக அவரது புகழுக்கு களங்கம் ஏற்பட்டது. 

இதன் காரணமாக ஆங் சாங் சூகிக்கு வழங்கப்பட்ட கவுரவ குடியுரிமையை ரத்து செய்வது என்று கனடா முடிவு செய்தது. இதற்காக கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே ஆங் சாங் சூகியின் கவுரவ குடியுரிமை ரத்தாகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

SCROLL FOR NEXT