உலகம்

விடுதலையாகிச் செல்ல மறுக்கும் சிறைக் கைதிகளைக் கொண்ட லக்ஸரி சிறை

தண்டனைக் காலம் முடிந்து, சிறையில் இருந்து விடுதலையாக விரும்பாத சிறைக் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

ENS


தண்டனைக் காலம் முடிந்து, சிறையில் இருந்து விடுதலையாக விரும்பாத சிறைக் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

ஆம் இந்த உலகத்தில் அதுபோன்ற சிறைச் சாலையும் இருந்திருக்கிறது. அதுதான் மெக்ஸிகோவின் மரியா தீவில் இருக்கும் சிறைச்சாலை.

மெக்ஸிகோவின் முக்கிய நிலப்பரப்பில் இருந்து படகை எடுத்துக் கொண்டு 8 மணி நேரம் பயணித்தால் மரியா தீவில் அமைந்திருக்கும் இந்த சிறைச்சாலையை அடையலாம்.

இந்த சிறைச்சாலைக் கட்டப்பட்ட பல ஆண்டுகள் ஆன நிலையில் இதனை மூடி விட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதான் அந்த சிறைச்சாலையின் நுழைவு வாயில்.

இந்த சிறை வரலாற்றில் இதுவரை 64,000 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடைசியாக இங்கே இருந்த 584 கைதிகளும் வேறு முக்கியச் சிறைக்கு மாற்றப்பட்டனர். அழகும், நல்ல தட்பவெப்பநிலையும் கொண்ட இந்த சிறைக்கூடம், தண்டனைக்கான இடமாக இருக்காது என்று கருதியே இது மூடப்படுவதாகவும் கூறப்படுகிறது.


விடுதலையானாலே வெளியேற விரும்பாத நிலையில் கைதிகள் தப்பித்துச் செல்லாமல் தடுக்க வீணாக இருக்கும் முள் வேலிகள்.


சிறைக் கூடத்தின் முக்கிய இடம். இந்த சிறைக் கூடம் 1905ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு, இந்த சிறைக் கூடத்தின் சிறை அறைகளை நாம் பார்க்காமல் போனால் எப்படி? இதோ இரண்டு கைதிகள் அடைக்கப்படத்தக்க ஒரு சிறை அறை.

இந்த சிறையைச் சுற்றி பாதுகாப்புக்கு ஆட்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறை வளாகத்துக்குள் இருக்கும் அழகிய சாலைகள்.

இந்த சிறைக்குள் இருக்கும் ஒரு சில சிறைக் கைதிகளும் தப்பிச் சென்றிருக்கார்களாம். அவர்கள் இந்த தீவின் 10 - 20 கிலோ மீட்டர் தூரப் பகுதிகளை சுற்றிப் பார்த்துவிட்டு சிறைத் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவார்களாம்.

தப்பிச் செல்ல முடியாததற்குக் காரணம் இது ஒரு தீவு. வாரத்துக்கு ஒரு முறை மட்டும் உணவு பொருட்களை ஏற்றிக் கொண்டு இங்கு ஒரு சிறிய படகு வந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இனி இந்த மரியா தீவு புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

பேரவைத் தேர்தல் : அதிமுகவிடம் 35 தொகுதிகளைக் கேட்கும் பாஜக?

SCROLL FOR NEXT