உலகம்

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிறகு ரிலையன்ஸ் குழுமத்துக்கு 143 மில்லியன் யூரோ வரிவிலக்கு: பிரெஞ்சு நாளிதழ் தகவல்

PTI

ரஃபேல் ஒப்பந்தத்துக்கு பிறகு அனில் அம்பானியின் தொலைதொடர்பு குழுமத்துக்கு 143.7 மில்லியன் யூரோ வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரபல பிரெஞ்சு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக லே மாண்டே, சனிக்கிழமை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

2015-ஆம் ஆண்டு இந்தியாவுடனான 36 ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிறகு பிரான்ஸில் செயல்பட்டு வரும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனத்துக்கு அந்நாட்டு அரசு 143.7 மில்லியன் யூரோ வருமானவரி விலக்கு அளித்துள்ளது. 

மொத்தம் 151 மில்லியன் யூரோக்கள் வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலையன்ஸ் ஃபிளாக் அட்லான்டிக் பிரான்ஸ் நிறுவனம், பிரான்ஸ் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் 7.3 மில்லியன் யூரோ வரி செலுத்தியிருந்தது. பிரான்ஸ் நாட்டின் விதிகளின்படி உரிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தீர்வு ஏற்படுத்தப்பட்டு இந்த வரிவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் எவ்வித விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT