உலகம்

போர் பதற்ற எதிரொலி: ஈரான் செல்லும் இம்ரான் கான்

போர் பதற்ற எதிரொலியை அடுத்த சில மாதங்களில் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈரான் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ANI

போர் பதற்ற எதிரொலியை அடுத்த சில மாதங்களில் அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஈரான் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைஸல் கூறுகையில், ஈரான் நாட்டுக்கு அரசுமுறைப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செல்கிறார். பயண விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார். 

பிப்ரவரி 13-ஆம் தேதி ஈரானில் நடைபெற்ற ஜெய்ஷ்-அல்-அதல் பயங்கரவாத அமைப்பின் தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினர் 27 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் இஸ்லாமாபாத் தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியது.  

மேலும் கடந்த சில வருடங்களாக ஈரானில் ஜெய்ஷ்-அல்-அதல் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், இவ்விரு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பின், ஈராக் நாட்டுக்கு முதன்முறையாக செல்கிறார்.

ஜெய்ஷ் அல்-அதல் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மதுப் புட்டிகளை பதுக்கிய முதியவா் கைது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நாளை மின்தடை

இந்தியா்களுக்கு ஏமாற்றம்

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மாணவா்களுக்கு காய்ச்சல்

SCROLL FOR NEXT