உலகம்

இலங்கையில் 2 ஐஎஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

DIN

இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. அந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் இலங்கையில் மறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் சிறீசேனா நேற்று கூறுகையில், "ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 130-க்கும் மேற்பட்டோர் நாட்டில் மறைந்துள்ளனர் என்றும் தாக்குதல் தொடர்பாக இதுவரை  70 பேரை கைது செய்துள்ளோம் என்றும் தெரிவித்தார். 

இந்நிலையில் இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இலங்கை பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். 

இதனிடையே இலங்கையில் கல்முனை அருகே குண்டுவெடிப்பு நடந்த சாய்ந்தமருது என்ற இடத்தில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 பேரின் உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர். தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இலங்கையில் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT