உலகம்

காஷ்மீர் சர்ச்சை: தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டம்? 

DIN

இஸ்லாமாபாத்: காஷ்மீர் சர்ச்சை காரணமாக இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் வழியாக காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால், மாநிலங்களவையில் திங்களன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக பாகிஸ்தானிலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் சர்ச்சை காரணமாக இந்தியாவுக்கான தூதரை திரும்ப அழைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தூதர் தற்போது பாகிஸ்தானில்தான் உள்ளார். அவர் வரும் 16-ஆம் தேதிதான் பதவியேற்க உள்ளார். எனவே தற்போது பொறுப்பு தூதராக உள்ள மூத்த அதிகாரியை பாக்சிதானுக்கு திரும்ப அழைப்பது என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT