உலகம்

போட்டிக் கேள்விக்கு அசத்தலான பதிலளித்து பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற சோசிபினி துன்சி!

Uma Shakthi

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வெல்வதற்கு முன் இறுதி நொடிகளில் சோசிபினி துன்சி தன் முன் வைக்கப்பட்ட சவாலான கேள்விக்கு அறிவுபூர்வமான பதில் அளித்தார்.

இன்றைய இளம்பெண்களுக்கு கற்பிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன என்று மிஸ் யூனிவர்ஸ் 2019 போட்டி நெறியாளர் புரவலன் ஸ்டீவ் ஹார்வி கேட்டபோது, சோசிபினி துன்சி கூறியது,  “இன்று நம் இளம்பெண்களுக்கு கற்பிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் அது தலைமைப் பண்புதான். இது நீண்ட காலமாக இளம் பெண்களும், பெண்களும் அடைய இயலாத இடமாக இருக்கிறது. நாம் அதை விரும்பாததால் அல்ல, ஆனால் சமூகம் பெண்களை ஒடுக்கி, பெண்கள்தானே என முத்திரை குத்தியதன் காரணமாகத்தான் சில உயரங்களை இன்னும் நாம் எட்டவில்லை.

பெண்கள்தான் உலகின் மிக சக்திவாய்ந்த உயிரிகள் நமக்கு எல்லா வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அதைத்தான் இந்த இளம்பெண்களுக்கு நாம் கற்பிக்க வேண்டும். நமக்கான இடத்தை நாம்தான் உருவாக்க வேண்டும். சமுதாயத்தில் நம்முடைய இடத்தை  எடுத்துக் கொள்வதுடன், நம்மை  உறுதிப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறொன்றும் முக்கியமில்லை. ”

போட்டியின் இறுதி கேள்விக்கு சோசினிபினி துன்சி அளித்த அருமையான பதிலைத் தொடர்ந்து, அவர் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT