உலகம்

470 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

RKV

லண்டன், டிசம்பர் 16 : லண்டனில் உள்ள ஃபார்முலா 1 குழுமத்தின் (F 1)முன்னாள் தலைமை நிர்வாகி பெர்னி எக்லெஸ்டோனின் மகள் தமரா எக்லெஸ்டோனின் வீட்டில் இருந்து 50 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள (ரூ. 470 கோடிக்கு மேல்) நகைகள் திருடப்பட்டுள்ளன.

தமரா கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாட  நாட்டை விட்டு வெளியேறியதால், கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் புகுந்தனர்.

தமரா எக்லெஸ்டோன்

அவரது படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை கண்டடைய திருடர்கள் தமராவின் மாளிகைத் தோட்டத்தின் வழியாக உள்ளே நுழைந்ததாக நம்பப்படுகிறது.

பிரிட்டிஷ் ஊடகங்கள் அனுமானித்த வகையில், தமராவின் மாளிகையில் நுழைந்த கொள்ளையர்கள் விலைமதிப்பற்ற மோதிரங்கள், காதணிகள் மற்றும் திருமண பரிசாக அவருக்கு வழங்கப்பட்ட 80,000 பவுண்டுகள் எடையுள்ள கார்டியர் வளையல் உள்ளிட்ட பொருட்களுடன் தப்பி ஓடிவிட்டதாகத் தகவல்.

"மாளிகை அலங்கோலங்களை பார்க்கையில் இந்த கொள்ளைச் சம்பவத்தை ஒட்டி இங்கு  ஒரு படையெடுப்பே நடந்து முடிந்தாற் போலிருக்கிறது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். இந்த விஷயத்தில் உள்நாட்டு பாதுகாப்பு போலீசாருடன் மாளிகை தரப்பு முழுமையாக ஒத்துழைக்கிறது" என்று எக்லெஸ்டோனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமரா குடும்பத்தினர் நலமாகவே இருக்கிறார்கள். ஆனால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் இந்தக் கொள்ளைச் சம்பவம் மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.  விசாரணையில் உதவக்கூடிய தகவல் யாரிடம் இருந்தாலும், தயவுசெய்து 8786 / 13DEC19  எனும் வழக்கு எண்ணைக் குற்றிப்பிட்டு 101 என்ற எண்ணில் காவல்துறையை அணுகலாம் என மாளிகை செய்தித் தொடர்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

57 அறைகள் கொண்ட இந்த மாளிகையானது 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்த போதும், மாளிகையின் சி.சி.டி.வி அறையில் ஒரு காவலர் அமர்ந்திருந்த போதும், மாளிகையைச் சுற்றிலும் தொடர்ந்த பாதுகாப்பு ரோந்து வசதி மற்றும் பல சோதனைச் சாவடி வசதிகள் நிறைந்தது எனும் பெருமைகளுக்குரிய ஒரு பிரத்யேக தெருவில் இருந்தபோதிலும், மூன்று கொள்ளையர்கள் புகுந்து மாளிகையைத் திறந்து பல படுக்கையறைகளின் பாதுகாப்பு மிக்க கதவுகளை உடைத்து நகைகளைக் கொள்ளையடித்து திறந்த ஜன்னல் வழியாக தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஏராளமான நகைகள் திருடப்பட்டதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருகின்றன' என்று பேலஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT