முகப்பு
உலகம்

எனக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தில் உடனடி விசாரணை தேவை: டிரம்ப்

எனக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பாக உடனடி விசாரணை தேவை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:36 PM
பகிர்:

எனக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பாக உடனடி விசாரணை தேவை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான 2 மசோதாக்கள் அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.

எனினும், நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியினா் பெரும்பான்மையாக உள்ள செனட் சபையில் இந்த மசோதா முறியடிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், டிரம்ப்பின் பதவிக்கு ஆபத்தில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தன் மீதான பதவி நீக்கத் தீர்மானம் தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறியதாவது:

ஜனநாயகக் கட்சியினர் எனக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானத்தை முன்மொழிந்ததில், வழக்குரைஞர்கள், சாட்சிகள் என்று வேறு எதுவும் இல்லை. இருப்பினும், அவையின் நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என்று மட்டும் விரும்புகின்றனர். உண்மையில், அவர்கள் எனக்கு எதிராக ஒரு ஆதாரம் கூட வைத்திருக்கவில்லை. 

எனவே, தான் எனக்கு எதிராக அவர்களால் ஒரு ஆதாராத்தையும் சமர்ப்பிக்க முடியவில்லை. நான் வெளியேற வேண்டும் என்று மட்டும் தான் ஜனநாயகக் கட்சியினர் விரும்புகிறார்கள். எனவே, எனது பதவி நீக்கத் தீர்மானத்துக்கு எதிராகs உடனடி விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.