முகப்பு
உலகம்

ஜமால் கஷோகி வழக்கில் தீர்ப்பை வரவேற்கும் அமெரிக்கா

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ஐந்து பேருக்கு எதிராக சவுதி அரேபிய நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:39 PM
பகிர்:

வாஷிங்டன்: பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பாக ஐந்து பேருக்கு எதிராக சவுதி அரேபிய நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

"இந்த கொடூரமான குற்றத்திற்கு பொறுப்பானவர்களை தண்டிக்க வைப்பதில் இன்றைய தீர்ப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதாக"  அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்தான்புல்லில் உள்ள ரியாத்தின் துணைத் தூதரகத்தில் கஷோகி கொலையில் அமெரிக்காவால் குற்றம்சாட்டப்பட்ட சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மானின் இரண்டு மூத்த உதவியாளர்களை இந்தக் கொலை வழக்கில் நீதிமன்றம் விடுவித்தது.

அமெரிக்கா "சவூதி அரேபியாவை ஒரு நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள ஊக்குவித்தது" என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.