ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்?
கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் ஹன்சா, கில்ஜித், காஸர் மற்றும் கர்டு ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் திங்கள்கிழமை மாலை 5:19 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது இட்காவின் வடமேற்கு பகுதியில் 38 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் ஹன்சா, கில்ஜித், காஸர் மற்றும் கர்டு ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதானல் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்களிடையே அச்சம் ஏற்பட்டது.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் திங்கள்கிழமை இரவு 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.