உலகம்

எகிப்து தலைநகரில் ரயில்வே நிலையத்தில் தீ விபத்து: 20 பேர் பலி 

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்,  20 பேர் பலியாகினர். 

DIN

கெய்ரோ: எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில்,  20 பேர் பலியாகினர். 

எகிப்து தலைநகரான கெய்ரோவில் அமைந்துள்ள ரயில் நிலையம் ஒன்றில், புதன்கிழமை காலை மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக பிளாட்பார்மில் உள்ள தடுப்பில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ரயிலில் திடீரென தீ பற்றியது.

மளமளவென பரவிய தீயில் சிக்கி 20 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும், 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். 

விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT