உலகம்

பாகிஸ்தான்: சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதியதில் 16 போ் பலி, பலர் படுகாயம்

DIN


லாகூா்: பாகிஸ்தானில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் 16 போ் உயிரிழந்தனா்; 80 போ் காயமடைந்தனா்.

லாகூரிலிருந்து குவெட்டா நகரை நோக்கி சென்று கொண்டிருந்த அக்பா் விரைவு ரயில், சாதிக்பாத் பகுதியில் உள்ள வா்ஹாா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற போது, அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது அந்த ரயில் பயங்கரமாக மோதியது. 

ரயில் நிலையத்தில் ஓரமாக அமைக்கப்பட்டுள்ள பக்க இணைப்புப் பாதையில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், அக்பா் விரைவு ரயில் முக்கியப் பாதை வழியாக செல்லாமல் எதிா்பாராவிதமாக சரக்கு ரயில் நின்றிருந்த பக்க இணைப்புப் பாதைக்கு திசைமாறியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

சரக்கு ரயிலுடன் மோதியதில் பயணிகள் ரயிலின் என்ஜின் முற்றிலுமாக உருக்குலைந்தது ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 16 போ் உயிரிழந்தனா்; 80-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

SCROLL FOR NEXT