உலகம்

மசூத் அஸார் சொத்துக்களை முடக்க பாக். அரசு உத்தரவு

DIN

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.பாதுகாப்பு கௌன்சில் அறிவித்துள்ள முடிவுக்கு அனைத்து நாடுகளும் கட்டுப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதையடுத்து, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக பாதுகாப்பு கௌன்சில் புதன்கிழமை அறிவித்தது. இதன்மூலம், சர்வதேச நாடுகளில் அவருக்குச் சொந்தமாக உள்ள சொத்துகளை முடக்கவும், அவரின் பயணத்துக்குத் தடை விதிக்கவும், அவரின் அமைப்புக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் தடை செய்யவும் முடியும்.

இந்நிலையில், மசூத் அஸாரின் சொத்துக்களை முடக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 2368 (2017) தீர்மானத்தின் படி அவருடைய அனைத்து சொத்துக்களை முடக்கவும், வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT