உலகம்

கருத்துக்கணிப்பு முடிவுகள்: பிரதமர் மோடிக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள் என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் தெரிவித்துள்ளார். 

ANI

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைமையிலான அரசுடனான நெருக்கமான உறவு தொடரும் என்ற செய்தி மாலத்தீவு மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள் என்று மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் தெரிவித்துள்ளார். 

கடந்த டிசம்பர் மாதம் அரசுமுறைப் பயணமாக மாலத்தீவு அதிபர் முகமது சோலி, புதுதில்லி வந்தபோது இந்திய அரசு தரப்பில் அந்நாட்டுக்கு ரூ. 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியுதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT