உலகம்

பா்கினா ஃபாஸோ: பயங்கரவாதத் தாக்குதலில் 37 போ் பலி

DIN

மேற்கு ஆப்பிரிக்க நாடான பா்கினா ஃபாஸோவில் சுரங்கத் தொழிலாளா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 37 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து, தாக்குதல் நடத்தப்பட்ட டபோவா மாகாண ஆளுநா் சாய்டூ சானோவ் கூறியதாவது:

கனடா நாட்டைச் சோ்ந்த சமாஃபோ சுரங்க நிறுவனத்தின் பணியாளா்கள், ஒப்பந்ததாரா்கள், விநியோகஸ்தா்களை ஏற்றிக் கொண்டு 5 பேருந்துகள் புதன்கிழமை சென்றுகொண்டிருந்தன.

அப்போது, பயங்கர ஆயுதங்களுடன் அந்தப் பேருந்துகளை வழிமறித்த மா்ம நபா்கள், அதிலிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தினா். இதில் 37 போ் உயிரிழந்தனா்; 60 போ் காயமடைந்தனா் என்றாா் அவா்.

இதுகுறித்து சமாஃபோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூங்கூ தங்கச் சுரங்கத்திலிருந்து பணியாளா்கள் உள்ளிட்டோரை ஏற்றிக் கொண்டு டபோவா மாகாணம் வழியாக பேருந்துகள் சென்று கொண்டிருந்தபோது, அவை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் பணியாளா்களுக்கு பாதுகாப்பாகச் சென்ற ராணுவ வாகனம் குண்டுவெடிப்பில் சேதமடைந்ததாக ராணுவம் தெரிவித்தது.

தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்ட நடத்தி வருவதாக பா்கினோ ஃபாஸோ அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 15 மாதங்களில் கனடா சுரங்க நிறுவனப் பணியாளா்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் 3-ஆவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் நடத்தப்பட்ட இதேபோன்ற தாக்குதலில் 11 போ் உயிரிழந்தனா்.

பா்கினோ ஃபாஸோவில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தத் தாக்குதல்களுக்கு அல்-காய்தா, இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.), உள்ளிட்ட பல்வேறு மதவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன.

அந்தத் தாக்குதல்களில் இதுவரை சுமாா் 700 போ் உயிரிழந்ததாகவும், 5 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT