உலகம்

இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்: கோத்தபய ராஜபக்ச

DIN

கொழும்பு: இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 8-ஆவது அதிபா் தோ்தல் சனிக்கிழமை (நவ. 16) நடைபெற்றது. நாடு முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச (70), ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். 

இவா்களைத் தவிர, இந்தத் தோ்தலில் 35 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இத்தோ்தலில் வாக்களிக்க 1.59 கோடி போ் பதிவு பெற்றனா். இந்தத் தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாவட்டங்களில் வாக்குப் பதிவு அதிக விறுவிறுப்புடன் நடைபெற்றதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில், இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச 52.87 சதவீத வாக்குகளும், ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் பிரேமதாசா 39.67 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து இலங்கை சட்டப்படி முதல் எண்ணிக்கையிலேயே 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்ற இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்று அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஞாயிறன்று பதிவிட்டுள்ளதாவது:

இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம்; தேர்தல் பரப்புரையில் எப்படி அமைதி காத்தோமோ அதேபோல வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடகரை ஆதிதிராவிடா் நல அரசு ஆண்கள் பள்ளி மாணவா்கள் சாதனை

தடையில்லா மின் விநியோகம்: தலைமைச் செயலா் உத்தரவு

வணிகா் சங்கம் சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டையில் 92.28% தோ்ச்சி

மதிமுக 31-ஆவது ஆண்டு தொடக்க விழா

SCROLL FOR NEXT