முகப்பு
உலகம்

இரு தரப்புக்கும் ஒப்புதலான பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது: போரிஸ் ஜான்சன் 

இரு தரப்புக்கும் ஒப்புதலான பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:24 AM
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
பகிர்:

லண்டன்: இரு தரப்புக்கும் ஒப்புதலான பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வகை செய்யும் ஒப்பந்தமானது பிரெக்சிட் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது.  இதுதொடர்பாக இரு தரப்பிற்கும் சுமுகமான ஒரு ஒப்பந்தத்தைக் கொண்டு வரும் முயற்சியில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் தெரேசா மே தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்யும் நிலை உருவானது. 

இந்நிலையில் இரு தரப்புக்கும் ஒப்புதலான பிரெக்சிட் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமக்கு ஒரு சிறப்பான பிரெக்சிட் ஒப்பந்தம் கிடைத்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான ஜீன் கிளாட் ஜங்கரும், 'இது நேர்மையான சமநிலையான ஓர் ஒப்பந்தம்’ என்று கருத்து  தெரிவித்துள்ளார்.  

இருந்தபோதிலும் இரு நாடுகளின் பாராளுமன்றங்களும் ஒப்புதல் தந்த பிறகுதான் பிரெக்சிட் ஒப்பந்தகம் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.  

முழு கட்டுரையைப் படிக்க →