உலகம்

சீனாவில் 8 ஆரம்பப் பள்ளி மாணவர்களை குத்திக் கொன்ற வெறியன்: பள்ளியின் முதல் நாளிலேயே  நிகழ்ந்த சோகம் 

IANS

பீஜிங்: சீனாவில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே 8 ஆரம்பப் பள்ளி மாணவர்களை வெறியன் ஒருவன் குத்திக் கொன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.   

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள என்ஷி நகரத்தில் கெயாங்போ ஆரம்பப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு செவ்வாயன்றுதான் வகுப்புகள் துவங்குகிறது.

இந்நிலையில் கெயாங்போ பள்ளி திறந்த முதல் நாளிலேயே 8 ஆரம்பப் பள்ளி மாணவர்களை வெறியன் ஒருவன் குத்திக் கொன்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.        

40 வயதுடைய 'யு' என்ற அந்த வெறியன் பள்ளியில் புகுந்து தன் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவர்களை சரமாரியாகக் குத்தியுள்ளான். இதில் 8 மாணவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து அவனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சமூகத்தின் மீது ஏற்பட்ட கோபத்தால் இவ்வாறு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவன், ஏற்கனவே தனது காதலியின் கண்ணை கத்தியால் நோண்டிக் கொல்ல முயன்ற குற்றத்திற்காக, 8 ஆண்டுகள் சிறையில் இருந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் சீனாவில் பலத்த கண்டனங்களை எழுப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT