சீனாவில் நடைபெற்ற உலக இயந்திர மனிதர்கள் மாநாடு!
2019-ம் ஆண்டுக்கான உலக இயந்திர மனிதர் மாநாடு அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்றது.
2019-ம் ஆண்டுக்கான உலக இயந்திர மனிதர்கள் (ரோபோ) மாநாடு மற்றும் கண்காட்சி சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சமீபத்தில் நடைபெற்றது. 180க்கும் மேலான தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 700 சிறந்த இயந்திர மனிதர் தயாரிப்புகள் இதில் இடம்பெற்றன. பெரும்திரளான பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு கண்காட்சியில் இடம்பெற்ற மாதிரிகளைப் பார்த்து ரசித்தனர்.
இதோ சில இயந்திர மனிதர்கள் (ரோபோ) மாதிரிகள்..
தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு