உலகம்

மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டத்துக்கான இளைஞர்கள் கருத்தரங்கு!

DIN


மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டத்துக்கான(எம்ஏபி)2019 இளைஞர்கள் கருத்தரங்கு சீனாவின் ஜிலின் மாநிலத்தில் 15ஆம் தேதி துவங்கியது. 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 270 பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டம் என்பது யுனெஸ்கோ அமைப்பால் 1971ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களுக்கிடையிலான திட்டமாகும். இது, மனிதருக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவை ஒருங்கிணைத்து, பல்வேறு துறைகள் தொடர்பாக ஒட்டுமொத்த ஆய்வை மேற்கொள்கின்றது. தவிரவும், கொள்கை வடிவமைப்பாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்கிடையில் நெருக்கமான ஒத்துழைப்புக்கும் இது முக்கியத்துவம் அளிக்கின்றது.

2020ஆம் ஆண்டு, உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய ஒப்பந்தத்தை உருவாக்கிய நாடுகளின் 15ஆவது மாநாடு சீனாவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT