உலகம்

சீன அரசுத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாக வாங் யீ நிகழ்த்திய உரை

DIN

சீன அரசுத் தலைவரின் சிறப்புப் பிரதிநிதியாக அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடரவல்ல வளர்ச்சி இலக்கிற்கான ஐ.நா உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார்.

இம்மாநாட்டில் வாங் யீ நிகழ்த்திய உரையில், 2030-ஆம் ஆண்டுக்கான தொடரவல்ல வளர்ச்சி நிரல் உலக வளர்ச்சி ஒத்துழைப்பின் புதிய கட்டத்தைத் துவக்கியுள்ளது. வளரும் நாடுகள் கவனம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு உண்மையாக முக்கியத்துவம் அளித்து பொருளாதாரம், சுற்றுச்சூழல், சமூகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். 

மேலும், பலதரப்பு வாதத்தை உறுதியாக ஆதரித்து, சர்வதேச அமைப்பு முறையில் ஐ.நா ஆற்றும் மையப் பங்கிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவிரவும், மனித குலத்தின் இனிமையான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில், சர்வதேசச் சமூகத்துடன் சீனா தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளும் என்று வாங் யீ தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT