உலகம்

மேலை நாடுகளின் இனவேறு பாகுபாட்டுக்கு 50 நாடுகள் கண்டனம்

DIN

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 42 ஆவது கூட்டத்தில் செப்டம்பர் 24-ஆம் நாள் இனவெறிவாதம் மற்றும் இனவெறிப் பாகுபாடு பிரச்சினை தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. 

சீனா, அரபு நாடுகள், ரஷியா, பாகிஸ்தான், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 50க்கும் அதிகமான நாடுகள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகள் உரைநிகழ்த்தியபோது, மேலை நாடுகளில் நிலவும் இனவெறிவாதம், இனவெறிப் பாகுபாடு, பகைமைக் கூற்று, குடியேறுவோரின் உரிமை மீறல் முதலிய மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாகக் குற்றஞ்சாட்டினர்.

தவிர, அமெரிக்கா, நியூசிலாந்து முதலிய நாடுகளில் பகைமைக் கூற்றின் பரவல் காரணத்தால் குடியேறுவோர் போன்ற சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைச் செயலை மெக்சிகோ உள்ளிட்ட 30 நாடுகளின் பிரதிநிதிகள் தங்களின் உரையில் சாடினார். 

சில நாடுகளின் சமூகப் பிரமுகர்கள், அரசியல் நோக்கத்திற்காக பாகுபாட்டையும் அந்நிய எதிர்ப்பையும் தூண்டுவதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT