உலகம்

காந்தி நினைவு ஐ.நா. தபால் தலை வெளியீடு

DIN

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்ததினத்தை முன்னிட்டு ஐ.நா.பொதுச் சபை தலைமையகத்தில் காந்தி சூரியப் பூங்காவை செவ்வாய்கிழமை திறந்து வைத்தார்.

இதில், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் தென் கொரியா அதிபர் மூன்-ஜெய்-இன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஐ.நா தலைமையகத்தில் 'தற்கால உலகில் மகாத்மா காந்தியின் பங்களிப்பு' என்ற நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உலகத் தலைவர்களும் பங்கேற்றனர். 

அப்போது, 150-ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு மகாத்மா காந்தியை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபையின் மகாத்மா காந்தி நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

பாரதிதாசனின் 134-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நிர்மலாதேவி குற்றவாளி

SCROLL FOR NEXT