உலகம்

வறுமை ஒழிப்பில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ள சீனா!

சீனாவில் தற்போதைய வரையறையின்படி வறுமை நிலையில் சிக்கியுள்ள 95 சதவீத மக்கள் மற்றும் 90 சதவீதத்துக்கு மேலான மாவட்டங்கள் இவ்வாண்டின் இறுதிக்குள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

DIN

சீனாவில் தற்போதைய வரையறையின்படி வறுமை நிலையில் சிக்கியுள்ள 95 சதவீத மக்கள் மற்றும் 90 சதவீதத்துக்கு மேலான மாவட்டங்கள் இவ்வாண்டின் இறுதிக்குள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர். 2020-ம் ஆண்டு ஓராண்டுகால முயற்சியுடன், சீனத் தேசத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நிலவியுள்ள வறுமைப் பிரச்னைக்கு தீர்வுமுறை காணப்படும் என்று சீன அரசவையின் வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான தலைமைக் குழு அலுவலகத்தின் தலைவர் லியூ யொங்ஃபூ, செப். 27-ஆம் தேதி பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

அதேசமயத்தில், உள்கட்டமைப்பு மற்றும் பொதுசேவைக்கான நிதி ஒதுக்கீடு பெருமளவில் அதிகரித்து வருவதோடு, சீனாவில் வறிய பகுதிகள் வளர்ச்சி பெறுவதற்குரிய திறன் தெளிவாக வலுவடைந்துள்ளது. அங்குள்ள தனிச்சிறப்பு மற்றும் மேம்பாடுடைய தொழில்கள் வேகமான வளர்ச்சியைக் கண்டு, உயிரினச் சூழல் சீராக்கப்பட்டு, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து வருகிறது.

மேலும், நடைமுறைக்கு இணங்க தெளிவான இலக்கு கொண்ட வறுமை ஒழிப்பு நெடுநோக்கு திட்டங்களின் நடைமுறையாக்கம், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி வழிமுறையை வெளிப்படுத்தி, உலகின் வறுமை ஒழிப்புக்கு சீன ஞானம் மற்றும் தீர்வை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: தமிழ்ப் பிரிவு, சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகாசி பேரிடர்! மாயமான கேரள சுற்றுலாக் குழு கண்டுபிடிப்பு!

அளவற்ற இணையம், ஓடிடி: ரூ.1,601-க்கு வோடாஃபோன் ஐடியாவின் புதிய திட்டம்!

சட்டை படம்தான் குறியீடு; யாரென்றே தெரியாது!போதைப்பொருள் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி!!

வெண் அமிழ்தம்... ரஷ்மிகா மந்தனா!

முதலீடுகளுக்கான முதல் முகவரியாக தமிழ்நாடு: அமைச்சர் தங்கம் தென்னரசு

SCROLL FOR NEXT