மோடியின் பதவியை தவறாகக் குறிப்பிட்டுப் பேசிய இம்ரான் கான்; அதுவும் ஐ.நா. சபையில்!
இந்தியப் பிரதமர் மோடி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக இந்திய குடியரசுத் தலைவர் மோடி என்று குறிப்பிட்டு. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியியுள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி என்று குறிப்பிடுவதற்கு பதிலாக இந்திய குடியரசுத் தலைவர் மோடி என்று குறிப்பிட்டு. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியியுள்ளார்.
நியூயாா்க் நகரில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் முதல் முறையாகப் பங்கேற்றுப் பேசிய இம்ரான் கான், அண்டை நாட்டு பிரதமரின் பதவியையே தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களுக்கும் பேசுவதற்கு தலா 15 நிமிடங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இம்ரான் கான் 50 நிமிடங்கள் உரையாற்றினாா்.
அப்போது, ஜம்மு-காஷ்மீரில் மனிதத் தன்மையற்ற வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும், அதனை இந்தியா நீக்க வேண்டும் என்றும் இம்ரான் கான் வலியுறுத்தினாா்.
மேலும், ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை அவா் மீண்டும் சா்வதேச பிரச்னையாக்குவதற்கு முயற்சி செய்தாா்.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ஈரான் அதிபர் ஹஸ்ஸன் ரௌஹானியும், இம்ரான் கானும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது, ஜெர்மனியும், ஜப்பானும் எல்லையைப் பகிர்ந்து கொள்வதாக தவறான தகவலை அளித்தார், ஆனால் அவர் சொல்ல வந்தது ஜெர்மனியும், பிரான்ஸும் என்பதுதான்.