உலகம்

15 ஆயிரத்தை நெருங்குகிறது பலி எண்ணிக்கை: திணறும் இத்தாலி

DIN

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. 

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. சீனாவில் தொடங்கி 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளைப் கரோனா பாதித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் உலக அளவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. அங்கு நோய்த்தொற்று பரவல் தீவிரமாக உள்ளது. கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 1,19,827 ஆக உள்ளது.  இதுவரை பலியானோர் எண்ணிக்கை 14,681 ஆக அதிகரித்துள்ளது.  அந்நாட்டில் இதுவரை 19,758 பேர் குணமடைந்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT