முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் 20 ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் 20 ஊழியர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 11 ஏப்ரல், 2020 at 3:00 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 9:55 PM

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் 20 ஊழியர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் உருவாகி தற்போது உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. அந்த நோய்த்தொற்றால் உலகளவில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம் பலி எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை தாண்டியது. இந்தியாவின் அண்டை நாடுகளிலும் கரோனா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் நேற்று மட்டும் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிபர் மாளிகையில் 20 ஊழியர்களுக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கும் கரோனா பரிசோனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

அதேசமயம் பரிசோதனை மேற்கொள்ள போதுமான கருவிகள் தேவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இத்துடன் ஆப்கனில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 521ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.