கரோனா: பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம்
கரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தி அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
உலகம்கரோனா: பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடம்
கரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தி அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
கரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தி அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா நோய்த்தொற்று தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா அந்த நோய்த்தொற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
அங்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 33 ஆயிரத்து 115 ஆக உள்ளது. அந்த வைரஸால் நேற்று மட்டும் 1,830 பேர் பலியாகி உள்ளனர்.
இத்துடன் அங்கு கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 580ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் கரோனா பலி எண்ணிக்கையில் இத்தாலியை முந்தி அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
| நாடுகள் | கரோனா பாதிப்பு | கரோனா பலி |
| அமெரிக்கா | 533,115 | 20,580 |
| ஸ்பெயின் | 163,027 | 16,606 |
| இத்தாலி | 152,271 | 19,468 |